search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கானா அரசு"

    கானா நாட்டின் தலைநகரில் நிறுவப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் சிலை, விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் காரணமாக அகற்றப்பட்டுள்ளது. #GhanaGandhiStatue
    அக்ரா:

    ஆப்ரிக்கா நாடான கானாவிற்கும் இந்தியாவிற்கும் உள்ள நட்புறவுக்கு அடையாளமாக, கானா தலைநகர் அக்ராவில் இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தி சிலை நிறுவப்பட்டது. கானா அரசு பல்கலைக்கழக வளாகத்தில் இந்த சிலையை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார். 

    ஆனால் மகாத்மா காந்தி கறுப்பு ஆப்ரிக்கர்களுக்கு எதிரான இனவாதி என விரிவுரையாளர்கள் பலரும் புகார் கூறினர். காந்தி சிலையை அகற்ற வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தினர். இது தொடர்பாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். உள்நாட்டு தலைவர்களும் விமர்சனங்களை முன்வைத்தனர். இதனால் சிலையை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் வைக்க கானா அரசு முடிவு செய்தது.

    இந்நிலையில் கானா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள காந்தி சிலை சமீபத்தில் அகற்றப்பட்டது. இதுதொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகிகள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இது பல்கலைக்கழகம் எடுத்த முடிவு என கானா உள்துறை தெரிவித்துள்ளது. 

    வழக்கறிஞரான மகாத்மா காந்தி, கடந்த 1893ம் ஆண்டு தென் ஆப்ரிக்கா சென்றார். அங்கேயே 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்த அவர், பல்வேறு ஆப்ரிக்க நாடுகளிலும் நிறவெறிக்கு எதிராக போராடியது குறிப்பிடத்தக்கது. #GhanaGandhiStatue
    ×